Kogilavani / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
முஸ்லிம்களின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) இன் பிறந்த தினமான மீலாதுன் நபி விழாவை முன்னிட்டும் இலங்கையின் 64 சுதந்திர தினத்தை முன்னிட்டும் இன்று கல்குடாத் தொகுதி முஸ்லிம் பிரதேசத்தில் சமாதன ஊர்வலமும் துஆ பிராத்தனையும் இடம்பெற்றது.
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலை மைதானத்தில் ஆரம்பமான இவ் ஊர்வலம் ஓட்டமாவடி ஜூம்ஆ பள்ளிவாயலில் தூஆ பிராத்தனையில் ஈடுபட்டதன் பின்னர் மீறாவோடை வழியாக ஓட்டமாவடி மேம் பாலத்துச் சந்திக்கு வந்து மீண்டும் வாழைச்சேனையை வந்தடைந்தது.
கல்குடா அஸ்ஸலாம் மீடியா ஏற்பாட்டில் பிரதேசத்தில் உள்ள குர்ஆண் மதரஸா மாணவர்கள் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.
இந்நிகழ்வில், ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளி வாயல் நிர்வாகம் மற்றும் அஸ்ஸலாம் மீடியா நிர்வாகத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago