2026 மே 14, வியாழக்கிழமை

வணக்கஸ்தலங்களில் திருட்டு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 05 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கிறிஸ்தவ தேவாலயமும் பள்ளிவாசலும் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டு அங்கிருந்த ஒலிபெருக்கிச் சாதனங்கள் களவாடப்பட்டுள்ளன.

ஆரையம்பதி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பிரதேசத்தின் பற்றிமாபுரம் கிராமத்திலுள்ள பற்றிமா அன்னை கிறிஸ்தவ தேவாலயத்திலும் அருகிலுள்ள கீச்சான் பள்ளம் கிராமத்தின் மீரா ஜும் ஆ பள்ளிவாசலுமே களவு போயுள்ளன.  
அத்துடன், கிறிஸ்தவ தேவாலயத்திலிருந்த நற்கருணை பேளையமும் உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில் நிர்வாகிகள் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், பொலிஸார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .