Super User / 2012 பெப்ரவரி 05 , பி.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
கடந்த 27ம் திகதி மட்டக்களப்பில் வைத்து ஆயுத முனையில் கடத்தப்பட்டு விடுவிக்கப்பட்டதாக கூறப்படும் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முக்கியஸ்தர் ஏ.சி.எம்.அஸாம் என்பவர் எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கதை பிழiயாக வழிநடத்தி கடத்தப்பட்டதாக பொய் கூறி நாடகமாடியுள்ளார் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இன்று தனது அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்க முக்கியஸ்தரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான பொறியியலாளர் எம்.எம்.அப்துர் றஹ்மான் இதைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அப்துர் றஹ்மான் மேலும் கூறுகையில்,
'கடந்த 27ம் திகதி எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முக்கியஸ்த்தர் ஏ.சி.எம்.அஸாம் என்பவர் மட்டக்களப்பில் வைத்து ஆயுத முனையில் கடத்தப்பட்டு நான்கு மணித்தியாலயங்கள் தடுத்து வைக்கப்பட்டு அச்சுறுத்தப்பட்டார் என நாங்கள் கடந்த 29ம் திகதி நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்திருந்தோம்.
மேற்படி அஸாம் என்பவர் கடந்த 27ம் திகதி கடத்தப்பட்டார் என்றும் அச்சுறுத்தப்பட்டார் என்றும் எங்களிடம் கூறியதுடன் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்திருந்திருந்தார்.
அவர் கூறியதற்கமைய எமது இயக்க முக்கியஸ்த்தர் என்பதால் நாங்கள் இரண்டு வகையான நடவடிக்கைகளை எடுத்தோம். பொலிஸாரிடம் இந்த கடத்தல் தொடர்பாக விசாரணைகளை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்து அழுத்தங்களை கொடுத்தோம். அதே போன்று இது தொடர்பாக நாங்களும் துரிதமான விசாரணைகளை மேற்கொண்டோhம்.
இந்த வேளையில் தான் கடந்த 30ம் திகதி அன்று இவர் எங்களிடமும் பொலிஸாரிடமும் கூறிய கடத்தப்பட்ட நேரம் தொடர்பில் எங்களுக்கு முக்கியமான தகவல் ஒன்று கிடைத்தது.
இவர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 27ஆம் திகதி மாலை 6.15 மணிக்கும் இரவு 10.மணிக்கு மிடையில் மூன்று பேருடன் காத்தான்குடியில் காணப்பட்டார் என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது இதையடுத்து நாங்கள் அஸாமுக்கு தெரியாமலேயே விசாரணைகளை மேற்கொண்டோம். 4.2.2012 ஆம் திகதி நேற்று ஒரு மணிக்குப்பின்னர் விசாரணைகளை துரிதப்படுத்தினோம்.
அதன் பின்னர் அஸாமை அழைத்து 4ம் திகதி இரவு 11மணி தொடக்கம் 5ஆம் திகதி இன்று அதிகாலை வரை அவருடன் கலந்துரையாடி விடயங்களை விணவிய போது அவர் இதில் முரண்பாடான கருத்தக்களை வெளியிட்டார்.
இதனால் இவர் கடத்தப்பட்டதாக ஒரு நாடகமாடியுள்ளார் என்று தெரிய வந்தது.
இவர் பொய் கூறுகின்றார் என தெரிய வந்தது. இதனால் எமது சூறா சபை அவசரமாக இன்று கூடியது அதில் இவரின் இந்த தகவல்கள் குறித்து ஆராய்ந்தோம்.
பின்னர் எந்த வழியில் இவரின் கடத்தல் தொடர்பாக அறிவித்தோமே அதே வழியில் இதை நாம் மக்களுக்கு கூறுவது என எமது சூறா சபை முடிவெடுத்தது. அந்த வகையில் தான் இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்துகின்றோம்.
அதே போன்று நாம் பொலிஸாருக்கும் பாதுகாப்பு துறையினருக்கும் இதை தெரிவிப்பதுடன் மேற்படி அஸாம் என்பவரை விசாரிக்குமாறும் கோரவுள்ளோம்.
இவ்வாறு கடத்தல் நாடகமாடிய மேற்படி அஸாம் என்பவரை எமது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தை விட்டு முற்றாக நிறுத்தவதுடன் அவர் எமது இயக்கத்தில் வசித்த அத்தனை பதவிகளிலிருந்தும் இவரை நீக்கி விடுவது என நாம் முடிவெடுத்துள்ளோம்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் பொறுப்புள்ள ஒரு ஒரு அரசியல் இயக்கம் என்ற வகையில் உண்மை, சத்தியம், நேர்மை என்பதை வலியுறுத்தி எமது இயக்கம் அரசியல் செய்து வருகின்றது என்பதால் மற்றைய அரசியல் கட்சிகள் போன்று இல்லாமல் மிகவும் நேர்மையான முறையில் இந்த விவகாரம் தொடர்பில் நாம் பகிரங்கமாக மன்னிப்புக் கோருகின்றோம்.
இந்த விவகாரம் தொடர்பில் நாங்கள் எமது கடந்த ஊடகவியலாளர் மாநாட்டில் குற்றம் சுமத்திய காத்தான்குடி நகர சபை தலைவர் மற்றும் நகர சபை நிர்வாகத்திடம் பகிரங்கமாக மன்னிப்புக்கோருகின்றோம்.
எனினும் காத்தான்குடி நகர சபையின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் நாம் கூறி வருவதற்கு எம்எமிடம் ஆதாரங்கள் உண்டு.
காத்தான்குடி நகர சபையின் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ஆதாரத்துடன் தான் நாம் பேசி வருகின்றோம்.
கடந்த 26ம் திகதி நடைபெற்ற காத்தான்குடி நகர சபை கூட்டத்திலும் காத்தான்குடி நகர சபை கேள்வி மனக்கோரல் விடயத்தில் கையாண்ட ஊழல் தொடர்பாகவும் ஆதாரத்துடன் எடுத்துக்கூறியுள்ளோம்
எனவே இந்த கடத்தல் விடயம் தொடர்பில் நாடகமாடி எமது இயக்கத்தை பிழையாக வழிநடாத்திய அஸாம் என்பவருக்கெதிராக பொலிஸ் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளோம்' எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த ஊடக வியலாளர் மாநாட்டில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் அஸ்ஸெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் நழீமி உட்பட அதன் செயலாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago