2026 மே 14, வியாழக்கிழமை

dd

வவுணதீவில் பாரிய வீதி அபிவிருத்தி திட்டங்கள்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேச வவணதீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் பாரிய வீதி அமைப்பு வேலைத்திட்டங்கள் கிழக்கு மாகாண முதலமைச்சரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மகிழவட்டுவான் பகுதியில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நிர்மாணமும் கிராமிய மின்சாரமும் நீர்வழங்கல் அமைச்சின் ஜெய்க்கா திட்டத்தின் கீழ் இரு வீதிகளுக்கான நிர்மாணப் பணிகள் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டன. மகிழவெட்டுவான் - நரிப்புல்தோட்டம் வீதி,மகிழவெட்டுவான் - பாடசாலை வீதி என்பனவற்றை சுமார் 2.5 கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளன.

இதன் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை, கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மகிந்தன் தலைமையில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு வீதி நிர்மாணப்பணியை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

கடந்த 30 ஆண்டுகால யுத்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள் வரலாறு காணாத வகையில் அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதாக முதலமைச்சர் சந்திரகாந்தன் தெரிவித்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், வவுணதீவு பிரதேச செயலாளர் வில்வரட்ணம், வவுனதீவு பிரதேச சபையின் தவிசாளர் சுப்ரமணியம் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .