Kogilavani / 2012 பெப்ரவரி 08 , மு.ப. 11:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கே.எஸ்.வதனகுமார்)
கிழக்கு மாகாணத்தில் வேளாண்மை அறுவடைக்குரிய நவீன ரக இயந்திரத்தை செலுத்துவதற்கு பயிற்சி அனுபவமற்ற சாரதிகள் போதியளவு இல்லாத காரணத்தினால் தாம் இந்தியாவிலிருந்து சாரதிகளை வரவழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்; இந்தியாவிலிருந்து வரும் சாரதிகள் தொழில் அனுமதி பத்திரத்துடன் இலங்கை வந்தால் சட்டரீதியான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படாது என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாய செய்கைகக்காக பயன்படுத்தப்படும் நவீன ரக இயந்திரங்களை செலுத்துவதற்கு சாரதிகள் உள்ளுரில் இருந்தாலும் அவர்களுக்கு பயிற்சியும் தொழில்நுட்ப அனுபவமும் போதியளவு இல்லாத காரணத்தினாலே இந்தியாவிலிருந்து சாரதிகளை தாம் வரவழைக்க வேண்டியிருப்பதாக விவசாயிகளும் இயந்திர உரிமையாளர்களும் தெரிவிக்கின்றனர்.
இந்திய சாரதிகள் முகவர்கள் ஊடாக அழைத்து வரப்பட்டாலும் சுற்றுலாப் பயணிகள் விஸாவில் நாட்டிற்குள் நுழைவதால் சட்ட ரீதியான பிரச்சினைக்கு இப்போது முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் 6 பேர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்;டு நீதிமன்ற உத்தரவின் பேரில் குற்றப் பணம் அறவிடப்பட்டு எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே இந்திய சாரதிகளிடம் உதவியாளர்களாக இருந்த உள்ளூர் வாசிகள் அந்த அனுபவத்தைப் பயன்படுத்தி இப்போது இந்த வாகனத்தை செலுத்துகின்றார்கள். அவர்களில் பலர் தற்போது இந்திய சாரதிகள் தேவையில்லை என்கின்றார்கள்.
ஆனாலும்; இதனை நிராகரிக்கும் அநேகமான விவசாயிகள் உள்ளூர் சாரதிகள் போதியளவு அனுபவமும் தொழில்நுட்ப அறிவும் பெறும் வரை இந்திய சாரதிகளின் உதவி தேவைப்படுவதாக கூறுகின்றனர்.
எனினும் இந்தியாவிலிருந்து இலங்கை வரும் இத்தகைய சாரதிகள் சுற்றுலாப் பயணிகள் விஸாவில் வராமல் வேலை அனுமதிப் பத்திரம் பெற்று வந்தால் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago