Super User / 2012 பெப்ரவரி 09 , பி.ப. 01:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பில் வைத்து இனந்தெரியாதோரினால் கடத்தப்பட்டு விடுதலை செய்யப்பட்டதாக நாடகமாடியதாக தெரிவிக்கப்படும் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்த்தர் ஏ.சி.எம்.அசாம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை சரணடைந்துள்ளார்.
சுட்டதரணியுடன் சரணடைந்த இவரை மட்டக்களப்பு பொலிஸார் விசாரணை மேற்கொண்ட பின்னர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இதன் போது அசாமை சரீர பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டதுடன் வழக்கு விசாரணை மார்ச் 5ஆம் திகதி நடைபெறும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜனவரி 27ஆம் திகதி மாலை 6.15 மணி முதல் இரவு 10.15 மணியளவில் மேற்படி அசாமை மட்டக்களப்பு நகரில் இனந்தெரியாதோரினால்; கடத்தப்பட்டதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கடந்த 29ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்ததுடன் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
பின்னர் கடந்த பெப்ரவரி 5ஆம் திகதி, அசாம் கடத்தப்படவில்லை, இவர் கடத்தப்பட்டதாக தம்மிடம் பொய் கூறி நாடகமாடியுள்ளார் என நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் அறிவித்தனர்.
இதையடுத்து தலைமைறைவாகியிருந்த அசாமை மட்டக்களப்பு பொலிஸார் தேடி வந்தனர். இந்நிலையிலேயே இவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago