Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 03:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி,ஜிப்ரான்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டு பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் மேற்கொண்டு வரும் போலிப் பிரச்சாரங்களுக்கு எதிராகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஷ்பர் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கமும் அதன் சூறாசபை உறுப்பினர்களும் கடத்தல் நாடகமொன்றை பொய்யாக அரங்கேற்றி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மீதும் காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஷ்பர் மீதும் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் இந்த நடவடிக்கைகளை கண்டித்து காத்தான்குடியிலுள்ள வியாபார ஸ்தாபனங்களுக்கு முன்பாக கறுப்புக்கொடிகளை கட்டுமாறு நேற்று வியாழக்கிழமை மாலை துண்டுப்பிரசுரங்களும் வெளியிடப்பட்டன.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தையும் அதன் முக்கியஸ்தர் அஸாம் என்பவர் கடத்தப்பட்டதாக கூறி நாடகம் ஆடியதை கண்டித்து அவரை பொலிஸார் கைதுசெய்ய வேண்டுமெனவும் இன்றைய ஜும்ஆ தொழுகையின் பின்னர் எதிர்ப்புப் பேரணி நடைபெறுமெனவும் இந்த எதிர்ப்புப் பேரணியில் பொதுமக்களை கலந்துகொள்ளுமாறும் அந்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி அஸாம் என்பவர் நேற்று வியாழக்கிழமை மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்து பின்னர் நீதிமன்றில் விடுதலை செய்யப்பட்டார்.
.jpg)
.jpg)
.jpg)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago