2026 மே 14, வியாழக்கிழமை

dd

நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்திற்கு எதிராக காத்தான்குடியில் ஆர்ப்பாட்டம்

Super User   / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி, ரி.லோஹித், ஜிப்ரான்)

நல்லாட்சிக்கான மக்கள் இயக்க முக்கியஸ்தர்கள்  கடத்தல் நாடகமொன்றை அரங்கேற்றி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் ஆகியோர் மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாக கூறி காத்தான்குடியில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ ;தொழுகையின் பின்னர் கண்டன பேரணியொன்று இடம்பெற்றது.

காத்தான்குடி முகைதீன் மெத்தை பெரிய ஜும்ஆ பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமான இக்கண்டன பேரணி காத்தான்குடி பிரதான விதியிலுள்ள ஹிஸ்புல்லா கலாசார மண்டபம் வரை இடம்பெற்றது.

இதன்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கததின் முன்னாள் முக்கியஸ்தர் அஸாம் கடத்தப்பட்டதாக நாடகமடியதால் அவரை கைது செய்ய வேண்டும் என கோரிய மகஜரொன்று காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம கையளிக்கப்பட்டது.

இந்த கண்டன பேரணியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட் மற்றும் காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஷ்பர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கடந்த ஜனவரி 27ஆம் திகதி மட்டக்களப்பில் வைத்து கடத்தப்பட்டதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்க முன்னாள் முக்கியஸ்த்தர் ஏ.சி.எம்.அசாம் தனது பொலிஸ் முறைப்பாட்டை நேற்று வியாழக்கிழமை வாபஸ் செய்துள்ளதாக  மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த அசாமை மட்டக்களப்பு பொலிசார் தேடி வந்த நிலையில்,  சட்டத்தரணி ஏ.முகம்மட் றூபியுடன் நேற்று மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்று தனது கடத்தல் தொடர்பாக செய்திருந்த முறைப்பாட்டினை வாபஸ் வாங்கிக்கொண்டார்.

"கொழும்பு பல்கலைக்கழகத்தினால் அங்கீகரிக்கப்ட்ட சமூக அபிவிருத்தி தேசிய நிறுகத்தின் இறுதி ஆண்டு மாணவனான நான்,  அரசியல் நலன் சார்ந்த காரணங்களுக்காகவே கடத்தப்பட்டதாக பொய்யான முறைப்பாட்டை செய்தேன்.

அவ்வாறான கடத்தல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும்" அசாம் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் வழங்கியுள்ள வாக்குமூலத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .