2026 மே 14, வியாழக்கிழமை

dd

சுற்றுலா விஸாவில் வந்து தொழில்புரிந்த இந்தியர்கள் மூவர் விளக்கமறியலில்

Kogilavani   / 2012 பெப்ரவரி 10 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஆர்.அனுருத்தன்)

 

சுற்றுலா விஸாவில் வருகை தந்த மூன்று இந்தியர்கள் விஸாவின் விதிகளை மீறும் வகையில் வாகரைப் பிரதேசத்தில் வயல் அறுவடை இயந்திரங்களை இயக்கி தொழில் புரிந்த குற்றச்சாட்டில் வாகரை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் வாகரை சுற்றுலா நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டபோது இம்மூவரையும் இம்மாதம் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.என்.றியால் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே கைது செய்யப்பட்ட இந்தியர் ஒருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டதன் பிரகாரம் ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணமும் ஒரு வருட  சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .