2026 மே 09, சனிக்கிழமை

dd

'பிரச்சினை தீர்க்கப்பட்டால் அரசியல் செய்யமுடியாது என்பதால் கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவில் இணைய மறுக

Kogilavani   / 2012 பெப்ரவரி 13 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்,எம்.சுக்ரி)

'நாடாளுமன்ற தெரிவுக் குழு ஊடாக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க முடியும். த.தே.கூட்டமைப்பினர்  நாடாளுமன்ற தெரிவுக் குழவில் இணைந்து கொண்டால் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள முடியும.; ஆனால் கூட்டமைப்பினர் தெரிவுக் குழுவில் இணைந்து பிரச்சினை தீர்க்கப்பட்டால், அவர்களால் அரசியல் செய்ய முடியாது என்பதால் இணைய மாட்டார்கள். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தெரிவுக்குழுவில் கூட்டமைப்பினர் இணைந்துகொள்ள வேண்டும்' என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இன்று ஆரம்பிக்கப்பட்ட 'பாரம்பரியத்திற்கு மகுடம்' எனும் பாரம்பரிய மூலிகைக் கண்காட்சியில் பிரதம விருந்தினாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இனப்பிரச்சினைக்கு நாடாளுமன்றத்தினுடாக தீர்வு காணமுடியும் என பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறும் கருத்துக்கு நான் உடன்படுகின்றேன். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதனை எனது அனுபவத்தினுடாகக் கூறுகின்றேன். 15 வருடத்திற்கு மேல் போராட்டத்தில் ஈடுபட்ட நான் ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கையிழந்து அரசியல் ஊடாக பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம் என தீர்மானித்து ஜனநாயக அரசியலுக்குள் நுளைந்தேன். இதுவரை எனது அரசியல் அனுபவத்தினுடாகவே பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கையை வெளியிடுகின்றேன்.

1950 ஆண்டுமுதல் அரசியல் பேச்சி ஊடாக பிரச்சினை தீர்க்கப்படவில்லை என்பதால் 30 வருடத்தின் பின்னர் ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்தோம். அதிலும் எட்டாத நிலையில் தற்போது மூன்றாம் கட்டத்திற்கு வந்துள்ளோம். பேச்சுவார்த்தை ஊடாக பிரச்சினைக்குத் தீர்வு காண தெரிவுக் குழுவில் த.தே.கூட்டமைப்பினர் இணைந்து கொண்டால் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடியும். ஆனால் த.தே.கூட்டமைப்பினர் வீரம் பேசுவார்கள் பிரச்சினையை தீர்க்கவல்ல. தெரிவுக்குழு ஊடாக பிரச்சினை தீர்க்கப்பட்டால் அவர்களால் அரசியல் செய்யமுடியாது என்பதால்.

நாங்கள் மக்கள் பிரதிநிதியாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் எமக்கும் ஜனாதிபதிக்குமிடையில் நெருக்கமான உறவு இருக்கிறது. பலமான அரசாங்கத்தினுடாக எதனையும் தீர்க்கலாம் கிடைக்கும் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டும். ஒரே அடியாக  முழுமையாக  தீர்வு காணமுடியாது. கட்டம் கட்டமாக தீர்வு காணமுடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகின்றேன்' என்றார்.


  Comments - 0

  • Iya Monday, 13 February 2012 11:59 PM

    புலிகள் தோற்கடிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஒதுங்கிவிடுவேன் என்று சொன்ன நீங்கள் எதற்காக இன்னும் அரசியல் செய்கிறீர்கள் என்று மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்.

    Reply : 0       0

    thurai Tuesday, 14 February 2012 04:46 AM

    புலிகள் வன்முறைய கைவிட்டு ஜனநாயத்துக்கு வந்து தமிழர்களின் பிரச்சினைய தீர்பார்கள் என்றால் தான் அரசியலில் ஒதுங்குவதாக அன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்று வரைக்கும் தமிழர் பிரச்சினைய தீரவிடாது இதைவைத்து அரசியல் பிழைப்பு நடத்தி வருகின்து தமிழ் தேசிய கூட்டமைப்பு.

    Reply : 0       0

    neethan Tuesday, 14 February 2012 02:26 PM

    அப்படியென்றால்,ஹெல உறுமய கட்சியும் அந்த நிலைப்பாட்டில்தான் உள்ளதோ? உங்களுக்கும் பிரச்சினை தீர்ந்தால் அமைச்சராக முடியாதே? உங்களுக்கு அரச பாதுகாப்புடன் பிரச்சினை தீரக்கூடாது,அவர்களுக்கு அரச எதிர்ப்பு மூலம் பிரச்சினை முடிவுக்கு வரக்கூடாது.

    Reply : 0       0

    jeyarajah Tuesday, 14 February 2012 04:15 PM

    மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி. மாநிலத்தில் அமைச்சரின் சுய ஆட்சியும் மத்தியில் அவரின் கூட்டாட்சியும் ந‌ன்றாகவே நடக்கின்றது.
    ஆனால் மக்களுக்கு ஒரு ஆட்சியும் இல்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .