2026 மே 09, சனிக்கிழமை

கஞ்சா சேனையுடன் மூவர் கைது

Super User   / 2012 பெப்ரவரி 13 , பி.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஸரீபா)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பல்லத்துச்சேனை பகுதியில் சேனைப்பயிர் செய்கையுடன் சேர்த்து செய்கை பண்ணப்பட்ட கஞ்சா சேனையை வாழைச்சேனை பொலிஸார் இன்று திங்கட்கிழமை கண்டுபிடித்துள்ளனர். இதன்போது, சந்தேகத்தின் பேரில் மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த பிரதேசத்திற்குச் சென்ற பொலிஸார் செய்கை பண்ணப்பட்ட கஞ்சா செடிகளை கைப்பற்றியதுடன் சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளனர்.

இச்சந்தேக நபர்களையும்; கஞ்சா செடிகளையும் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் நாளை செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்தப்படவுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஈ.ஜயவீர தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .