2026 மே 09, சனிக்கிழமை

சவூதி அரேபிய தூதுவராலய பிரதிநிதிகள் காத்தான்குடி விஜயம்

A.P.Mathan   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி,ஸரீபா)

கொழும்பிலுள்ள சவூதி அரேபியா தூதுவராலயத்தின் மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஸலாஹ் அல் பறாக் இன்று செவ்வாய்க்கிழமை காலை காத்தான்குடிக்கு விஜயம் செய்தார்.

பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் அழைப்பின் பேரில் காத்தான்குடிக்கு விஜயம் செய்த இவர் - புதிய காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுவரும் மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாயல் வடிவத்திலான புதிய காத்தான்குடி பெரிய ஜும்ஆ பள்ளிவாயலின் கட்டிட நிர்மாண வேலைகளை பார்வையிட்டார்.

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவின் வேண்டுகோளின் பேரில் சவூதி அரேபியாவின் உதவியுடன் இப்பள்ளிவாயல் கட்டிட நிர்மாண வேலைகளை மேற்கொள்ள உதவுவதாக இதன்போது அவர் உறுதியளித்தார்.

இதேவேளை, மீராவோடை உதுமான் பாடசாலைக்கு விஜயம் சவூதி அரேபியா தூதுவராலயத்தின் மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான பொறுப்பாளர் ஸலாஹ் அல் பறாக் பாடசாலையின் உட்கட்டமைப்பு வசதிகளை நிவர்த்தி செய்வதற்கு சவூதி அரசாங்கத்தின் மூலம் உதவியளிப்பதாக உறுதியளித்துள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் ஆயிரம் பாடசாலைத் திட்டத்திற்கு அமைய மீராவேடையில் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையான உதுமன் வித்தியாலயத்தின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்து தருமாறு பாடசாலை நிர்வாகம்  தூதுவராலயத்தின் இஸ்லாமிய மதவிவகாரங்களுக்குப் பொறுப்பாளரிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிகழ்வில் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லா கட்டிட நிர்மான வேலைகளையும் காண்பித்தார். குறித்த பள்ளிவாசலுக்கான அடிக்கல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0

  • ummpa Thursday, 16 February 2012 02:14 PM

    இப்படிதான் இருக்கவேண்டும். அவருக்கு தெரியும் கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகள். அதன் வெளிப்பாடுதான் தனது மக்களுடன் இணைந்து தனது ஊரை அபிவிருத்தி பண்ணுவதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார். இதனை மற்றவர்களும் பின்பற்றினால் தங்களது இடத்தை எதிகால தேர்தலில் உறுதிப்படுதிக்கொள்ளலாம். இது மிகவும் பொருந்தும். கல்முனை , நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை மக்கள் கொஞ்சம் கவனத்தில் கொள்ளுங்கள். தலைவர் மறைவு அதன்பின் இதுவரை உருப்படியா ஏதும் .............!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .