2026 மே 09, சனிக்கிழமை

சுற்றுலா விசாவில் வந்த இந்தியர்கள் அறுவடைக்காலத்தில் சாரதிகளாக கடமையாற்றலாம்: பிரதியமைச்சர் முரளிதரன

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 14 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் இலங்கை வந்து அறுவடை இயந்திரங்களில் சாரதிகளாக பணியாற்றும் விவசாயிகளின் நலன் கருதி தம்மிடம் விபரங்கள் வழங்கியவர்கள் என்ற அடிப்படையில் அறுவடைக்காலம் வரை இந்த இயந்திரங்களில் பணியாற்ற முடியும் என மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் அறுவடைக்காலம் ஆரம்பித்திருக்கின்ற நிலையில் வேளாண்மை அறுவடை இயந்திரங்களில் இந்தியாவிலிருந்து சுற்றுலா விசாவில் வந்தவர்கள் பணியாற்றுவதனால் பெரும் பிரச்சினைகள் தோன்றியிருந்தன.  இந்த விடயம் தொடர்பில் வேளாண்மை இயந்திரங்களைக் கொள்வனவு செய்தவர்களும் விவசாயிகளும் பல்வேறு சிரமங்களை அனுபவித்தனர்.

இதற்குக் காரணம் சுற்றுலா விசாவில் அறுவடை இயந்திரங்களில் சாரதிகளாகக் கடமையாற்றியவர்கள் குடிவரவு, குடியகல்வுக் காரணங்களுக்காக இராணுவம் மற்றும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டமையாகும்.

இதனை அடுத்து பாதுகாப்பு அமைச்சு, கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா உள்ளிட்டோரிடம் பேச்சு நடத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுள்ளதாக பிரதியமைச்சர் கூறினார்.

இதன் அடிப்படையில் தம்மிடம்  விபரங்கள் வழங்கியவர்கள் அறுவடைக்காலம் முடியும் வரையில் சாரதிகளாகக் கடமையாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் பொன். ரவீந்திரன் தெரிவித்தார்.

வேளாண்மை அறுவடைக்காலம் என்பதால் விவசாயிகள் நெல் அறுவடையில் விரைவாக ஈடுபட வேண்டிய கட்டாயம் காலநிலையால் ஏற்பட்டுள்ளது. அதேநேரம் அறுவடை நடவடிக்கைகளில் மனித வளத்தினைப் பயன்படுத்துவதிலும் உள்ள பிரச்சினை, மற்றும் இயந்திரங்களின் தவணை அடிப்படையிலான கொள்வனவு எனப் பல்வேறு பிரச்சினைகள் இந்த அறுவடைக்காலத்தில் உள்ள நிலையில் இந்தக் கைதுகள் நடைபெற்றிருந்நதமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • raafi Thursday, 16 February 2012 04:15 AM

    அமைச்சரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .