2026 மே 09, சனிக்கிழமை

dd

மங்களராம ரஜமஹா விகாரதாதிபதியின் உண்ணாவிரதம் முடிவு

Kogilavani   / 2012 பெப்ரவரி 14 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, மங்களராம ரஜமஹா விஹாரையின் விகாராதிபதி அம்பிற்றிய சுமணரத்தினதேரர் இன்று காலை முதல் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுக்கொண்டு வந்துள்ளார்.

 

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் விகாராதிபதியின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்ட பின்னர் தேரரின் கோரிக்கைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்று அதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாக உறுதி மொழி வழங்கியதையடுத்து இந்த உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது.

சிங்களம், முஸ்லிம், தமிழ் மக்களின் காணிப் பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு கோரியும் கிழக்கு மாகாணத்தில்  சிங்கள, தமிழ், முஸ்லிம் ஏழை மக்களுக்கு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசாங்க அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படுகின்ற பழிவாங்கல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவருவதற்கு ஜனாதிபதியின் தலையீட்டை  வலியுறுத்தியும் விகாராதிபதி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • thala Wednesday, 15 February 2012 04:14 AM

    இது என்ன நாடகம்......!

    Reply : 0       0

    siriththiran Wednesday, 15 February 2012 01:00 PM

    துறவி செய்தது நல்ல விஷயம் தானே .... போன அமைச்சருக்கும் உடனடியாக நூல் ஒண்டு கையில கட்டியாச்சு ...அடுத்த முறையும் தேசியப்பட்டியல் பா. உ பதவி கிடைக்கும் போல.

    Reply : 0       0

    Iya Thursday, 16 February 2012 11:48 PM

    இது தமிழ் மண்ணைப் பறிக்கும் கபட நாடகம் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .