2026 மே 09, சனிக்கிழமை

dd

கிழக்கு பல்கலை புதிய உப வேந்தராக கலாநிதி கி.கோவிந்தராஜா நியமனம்

Super User   / 2012 பெப்ரவரி 14 , பி.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.எஸ்.வதனகுமார்)

கிழக்கு பல்கலைக்கழத்தின் எட்டாவது உப வேந்தராக கனடாவிலுள்ள கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனம் தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவினால் கிழக்கு பல்கலைக்கழ நிர்வாகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் உப வேந்தராக கடமையாற்றிய கலாநிதி என்.பத்மநாதன் 2010ஆம் ஆண்டு நடு பகுதியில் எதிர்நோக்கிய நெருக்கடி நிலையொன்றின் காரணமாக பதவி விலகியதிலிருந்து குறித்த பதவி வெற்றிடம் காணப்பட்டது.

இந்நிலையில், குறித்த பதவிக்கு கிழக்கு பல்கலைக்கழக பேரவையினால் பேராதனை பல்கலைக்கழக மருத்துவ துறை பேராசிரியர் ஆர்.சிவக்கநேசன், கிழக்கு பல்கலைக்கழக விவசாய பீட பீடாதிபதி எஸ்.சுதர்சன், கனடாவில் வசிக்கும் கலாநிதி கிட்ணன் கொபிந்தராசா ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டிருந்தன.

இதனையடுத்தே கலாநிதி கிட்ணன் கோவிந்தராஜா கிழக்கு பல்கலைக்கழத்தின் எட்டாவது உப வேந்தராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கணித துறையில் கலாநிதி பட்டம் பெற்ற இவர், 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2004ஆம் ஆண்டு வரையிலான கால பகுதியில் கிழக்கு பல்கலைக்கழத்தில் விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
 
கிழக்கில் நிலவிய அசாதாரன சூழ்நிலை காரணமாக 2004ஆம் ஆண்டு  நாட்டை விட்டு வெளியேறிய, இவர் தற்போது கனடாவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றுகின்றார்.


  Comments - 0

  • neethan Wednesday, 15 February 2012 10:02 AM

    அப்பாடா ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது. அசாதாரண சூழ்நிலையில் எட்டு வருடங்களுக்கு முன் நாட்டை விட்டு வெளியேறிய, இவருக்கு தற்போதைய நிலை சாதகமாக அமைந்து, பல்கலை கழகம் எழுச்சி பெற வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    தா.விநாயகமூர்த்தி Wednesday, 15 February 2012 02:44 PM

    சம்மாந்துறை தமிழ் பிரிவு பெருமை கொள்கிறது. வீரமுனை, சம்மாந்துறை தமிழ் பிரிவு மக்கள் சார்பாக எங்கள் வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    neethan Wednesday, 15 February 2012 08:19 PM

    @ விநாயகமூர்த்தி, சம்மாந்துறை தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரிவு வாழ்த்துக்கிறது என்றால் இன்னும் கனதியாய் இருக்கும், அல்லது அவர் பிறந்தமண் வாழ்த்துகிறது என்று சொல்லியிருந்தால் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கும்.

    Reply : 0       0

    MUHAMMATH RANOOS Wednesday, 15 February 2012 09:34 PM

    நல்வரவு! சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் கலாநிதி கோவிந்தராஜாவுக்கு சம்மாந்துறை மக்கள் சார்பாக மனம் நிறைந்த நல வாழ்த்துக்கள்.சர்வ மங்கலம் உண்டாகட்டும்.. சம்மாந்துறை தாய் இவரது நியமனத்தில் உவகை கொள்கிறாள்.

    Reply : 0       0

    ramanan Thursday, 16 February 2012 01:25 AM

    இவர் போன்ற துறைசார் வல்லுனர்கள் மறுபடியும் நம் நாடுக்கு வந்தால் எமது கல்விசார் செயல்பாடுகள் மறுபடியும் மீண்டு வரும் ......

    Reply : 0       0

    Birdeye Thursday, 16 February 2012 03:41 AM

    வாழ்த்துக்கள் கோபி சார்................

    Reply : 0       0

    Eelan Thursday, 16 February 2012 12:09 PM

    சார், இது கனடா இல்ல. ப்ளீஸ். வெல்கம் சார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .