2026 மே 09, சனிக்கிழமை

பொலிஸார் - பொதுமக்கள் புரிந்துணர்வு ஒன்றுகூடல்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்,எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் மைலம்பாவெளி கிராம அலுவலகர் பிரிவை மையப்படுத்தி பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வு ஒன்றுகூடல் கரித்தாஸ் - எகெட் நிறுவகத்தின் அவையக சனசமூக மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பு கரித்தாஸ் - எகெட் நிறுவகத்தின் தேசிய சமாதானப் பிரிவானது, கிராமங்கள் தோறும் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் பரஸ்பர புரிந்துணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஒன்றுகூடல் நிகழ்வை  தங்களது செயற்றிட்டத்தில் உள்ளடக்கி நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த நிலையிலேயே மைலம்பாவெளி கிராம அலுவலகர் பிரிவை மையப்படுத்திய பரஸ்பர புரிந்துணர்வு ஒன்றுகூடல் நடைபெற்றது.

இவ் ஒன்றுகூடலில் கலந்துகொண்ட ஏறாவூர்ப் பொலிஸ் அதிகாரி தெரிவிக்கையில்,

'பொதுமக்கள் மீது அரசாங்கம் கூடிய கவனம் கொண்டுள்ளது. அதனை மக்கள் உணர முடியாதுள்ளனர். தற்போது ஒரு கிராம அலுவலகர் பிரிவிற்கு 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டு, கிராமங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றிற்கான தீர்வுகளை மக்களுக்கு வழங்குகின்றனர்.

இரவு வேளைகளிலும் பொலிஸார் தங்கள் கடமையைச் செய்கின்றனர்.  30 வருட  யுத்தகாலத்தின்போது தமிழ் மக்கள் பொலிஸில் தங்களது பிரச்சினைகளை முறையிட அச்சத்துடன்  இருந்தனர். ஆனால் தற்போது இந்த நிலை மாறிவிட்டது. மக்களைப் பொலிஸ் நாடிச்செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

ஒவ்வொரு கிராம அலுவலகர் பிரிவுகளிலும் விழிப்புக்குழுக்கள் நியமிக்கப்பட்டு பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படுகின்றன. இன்றைய கலந்துரையாடல் பொதுமக்களுக்கும்  பொலிஸாருக்கும் இடையிலான உறவை மேலும் பலப்படுத்தும் என நாம் நம்புகிறோம். பொலிஸார் பொதுமக்களின் பாதுகாவலர்கள் என்னும் மனப்பக்குவம் மக்கள் மத்தியில் வளரத் தொடங்கியுள்ள இக்காலகட்டத்தில் இந்நிகழ்வானது மிகவும் பொருத்தமானதொன்றாகும்' என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .