2026 மே 09, சனிக்கிழமை

dd

மண்டூர், கம்பியாற்றுக்குக் குறுக்காக பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு

Kogilavani   / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு - மண்டூர் கம்பியாற்றுக்கு குறுக்காக பாலம் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கென 1100 இலட்சம் ரூபா ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இந்த நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனூடாக பாலம் அமைப்பதன் மூலம் ஆணைகட்டியவெளி, நெடியவட்டை, சின்னவத்தை, மாலையர்கட்டு, காக்காச்சிவட்டை, விழாந்தோட்டம் உட்பட பல்வேறு பிரதேச மக்கள் நன்மை அடையவுள்ளனர்.

தினமும் பாடசாலை மாணவர்களும், அரச, தனியார் ஊழியர்களும் பெரும் சிரமத்தின் மத்தியிலேயே இவ்வாற்றை கடந்தே தமது அலுவல்களுக்குச் செல்கின்றனர்.

அத்துடன் இப்பிரதேசத்தில் அதிகளவான நெற்காணிகள் உள்ளதால் நெல் அறுவடைசெய்யும் வேளையில் அவற்றினை கொண்டு செல்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வெள்ள காலங்களில் இதன் நீர்மட்டம் அதிகரிக்கும் வேளையில் மக்கள் போக்குவரத்துக்கள் முற்றாக தடைப்படுவதுடன் பல கிலோ மீற்றர் தாண்டியே களுவாஞ்சிகுடி மற்றும் மண்டூர் பகுதிகளுக்கு செல்லவேண்டியுள்ளதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த பாலம் அமைக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைக்கு தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ள பொதுமக்கள் இதன் மூலம் தமது அன்றாட நடவடிக்கைகளை சிறப்பாக கொண்டுசெல்லமுடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதற்கு பாலம் அமைத்து தருமாறு மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு பாலம் அமைப்பதற்கான நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் ஓரிரு மாதங்களில் ஆரம்பிக்கப்படும் என தெரிவித்த மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், இதன்மூலம் இப்பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் நன்மையடைவுள்ளதுடன் இப்பகுதியில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளும் நன்மையடைவர் எனவும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .