Kogilavani / 2012 பெப்ரவரி 15 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட தொப்பிகல பிரதேசத்தின் முக்கிய வீதிகளில் ஒன்றான புலிபாய்ந்த கல் - பூலாக்காடு வீதி புனரமைப்பிற்கான வேலைத்திட்டங்கள் மீள்குடியேற்ற பிரதிமையச்சரினால் நேற்று முன்தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தொப்பிகல பிரதேசத்தின் நாலாம் முச்சந்தி வரையான இவ்வீதியின் அபிவிருத்திக்காக மொத்தமாக 85 மில்லியன் செலவாகும் நிலையில் முதல் கட்டமாக 35 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான மீதித் தொகை ஒதுக்கப்படும் என மீள்குடியேற்றப் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இவ்வீதி புனரமைப்பு செய்யப்படாமல் காணப்பட்ட நிலையில் விவசாயிகள் முதல் பலர் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வந்தனர்.
மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், பிரதேச செயலாளர் தவராஜா, மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்கள பிரதம பொறியியலாளர் மோகன்ராஜ், உறுகாமம் திட்ட பொறியியலாளர் கிரிசாந்த் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago