2026 மே 09, சனிக்கிழமை

மட்டு. மாவட்டத்தில் புகை கக்கும் வாகனங்கள் அதிகரிப்பு

Kogilavani   / 2012 பெப்ரவரி 15 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, மாவட்டத்தில் புகை கக்கும் வாகனங்களின் பாவனை அதிகரித்துள்ளமையால் போக்குவரத்து செய்வோர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாக விசனம் தெரிவிக்கின்றனர்.

மோட்டார் சைக்கிளோட்டிகள் மற்றும் பாதசாரிகள் பாடசாலை மாணவர்கள் தெருவோர அங்காடி வியாபரிகள் உட்பட பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பு-கல்முனை, மட்டக்களப்பு-பொலநறுவை நெடுஞ்;சாலைகளில் இவ்வாறான வாகனங்கள் அதிகமாக போக்குவரத்து சேவையில ஈடுப்பட்டு வருகின்றன.

மண் ஏற்றும் லொறிகள், குறுகிய சேவையில் ஈடுபடும் மினி பஸ்கள், சாதாரண வான்கள் உட்பட பல வாகனங்கள் இவ்வாறு அதிகளவிலான புகையினை வெளியிட்டு செல்கின்றன.

இதனால், மோட்டார் சைக்கிளோட்டிகள், பாதசாரிகள், பாடசாலை மாணவர்கள், தெருவோர அங்காடி வியாபாரிகள் உடபட பலரும் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே இவ்விடயம் தொடர்பில் உரியத் தரப்பினர் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .