Super User / 2012 பெப்ரவரி 16 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடியில் கடந்த ஜுலை மாதம் 20ஆம் திகதி தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட இரண்டு மாணவிகளும் எந்தவித குற்றமும் செய்யவில்லை என கண்டறியப்பட்டுள்ளதாக காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 26ஆம் திகதி இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலினை அடுத்தே காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அதிகாரிகள், காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகள், காத்தான்குடி ஜம்இயதுல் உலமா சபை பிரதிநிதிகள் மற்றும் காத்தான்குடி மெத்தை பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபை பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
"குறித்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட இரு மாணவர்களும் எந்தவிதமான குற்றங்களையும் மேற்கொள்ளவில்லை என இக்கலந்துரையாடலின் போது தெளிவாக கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காகவும் மற்றும் உள ரீதியான பாதிப்புக்களுக்காகவும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மனம் வருந்துகின்றது.
எனவே குறித்த இரு மாணவிகளிடமும் கண்ணியமாக நடந்து கொள்ளுமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் விநயமாக வேண்டுகிறது" என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலினை அடுத்து காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கி மூலம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இணக்கம் காணப்பட்டவாறு, குறித்த இரு மாணவிகளுக்கும் உதவி தொகையொன்றினை வழங்குவது தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் கலந்துரையாடி இரு கிழமைக்குள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு அலுவலகத்தினால் காத்தான்குடி பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவிகள் இருவரும் எவ்வித குற்றமும் புரியவில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு நீதவானின் உத்தரவிற்கிணங்க காத்தான்குடியிலுள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தினால் கடந்த ஜுன் 28ஆம் திகதி அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago
Raafi Thursday, 16 February 2012 11:48 PM
இது ஒரு பழைய செய்தி.
Reply : 0 0
Abdul Wahid Friday, 17 February 2012 12:34 AM
இவர்களுக்கு தண்டனை வழங்கியவர்களுக்கு தண்டணை வழங்க முடியுமா? தீர விசாரிக்காமல் சில தப்பான சாட்சிகளை உருவாக்கி, சிலர்களின் சொந்த பலன்களுக்ககாக உருவாக்கப்பட்ட நாடகம்.
Reply : 0 0
siriththiran Friday, 17 February 2012 03:09 AM
நல்ல முன்மாதிரியான விடயம். ஆனால் கண்ட கண்ட அரைவேக்காடுகள் தாம் நினைத்தபடி செயற்படுவதையும் தடை செய்தால் இவ்வாறான தான்தோன்றிகள் அடங்கும்.
Reply : 0 0
sathath Friday, 17 February 2012 02:54 PM
penkal widayathil munyosanaiyudan nadakkatha sila uurwaasihalaal, samoohathitkey ilivu. iniyaawathu samoohathalaivarhal kawanamaha nadakkattum.
Reply : 0 0
thowfeek Friday, 17 February 2012 03:01 PM
அந்த இரு பெண் பிள்ளைகளையும் அவர்களின் குடும்பங்களையும் அவமானப் படுத்திய அந்த இளைஞர் கூட்டத்துக்கு என்ன தண்டனை வழங்க போகிறார்கள்? அந்த பெண்களுடன் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் என்று பள்ளிவாயலில் அறிவித்தால் போன மானம் திரும்பி வந்து விடுமா? ஊரில் உள்ள பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காது அவமானப் படுத்திய ஆவேசம் கொண்ட அந்த இளைஞர்களுக்கு சரியான பாடம் புகட்டுங்கள். இல்லை என்றால் அவர்களின் விருப்பத்துக்கு இணங்காத பெண் பிள்ளைகளை இப்படி மானபங்க படுத்தி கொண்டே இருப்பார்கள்...
Reply : 0 0
ameerudeen Friday, 17 February 2012 04:38 PM
நீதிமன்று தீர்ப்பு கொடுத்த பிறகுதானா பள்ளிவாயலுக்கு விளங்கியது? நீதிமன்றம் போக முதல் பள்ளிவாயலால் விசாரணை செய்திருக்கலாமே. எது எப்படியோ அந்த மாணவிகள் நிருபரதிகள் என்றதே அவர்களுக்கு பெரிய ஆறுதலாக இருக்கும். அல்ஹம்துலில்லாஹ். . அவர்களுக்கு அல்லாஹ் நல்ல வாழ்வைக் கொடுக்க பிரார்த்திப்போம்.
Reply : 0 0
mohammed Hiraz Saturday, 18 February 2012 12:04 AM
கருத்தெழுதுவது இலகுவான விடயம். ஆனால் எதார்தங்களையும் அழுத்தங்களையும் புரிந்து கொள்வது கடினமான விடயம். பள்ளி ஒலிபெருக்கிக்களில் அறிவிப்பதால் பட்ட அவமானம் இல்லாமல் ஆகிவிடும் என்று பாதிக்கபட்டோரின் கோறிக்கையின் அடிப்படையிலேயே அறிவிக்கபட்டுள்ளது!!! தப்பு செய்தோருக்கு தண்டனை கொடுப்பது நீதி மன்றின் பொறுப்பாகும்!!! யாரும் யாரையும் கட்டுபடுத்தமுடியாது இளைஞர்கள் பிழை செய்வார்கள் என்பதற்காக கையை காலை முறிக்கவும் முடியாது சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பொலிஸிடமே கோரிக்கை முன்வையுங்கள் ஊர் தலைமைகளிடம் அல்ல!!!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
5 hours ago