Kogilavani / 2012 பெப்ரவரி 17 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி,ஜிப்ரான்)
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீனவர்களுக்கு திவிநெகும வாழ்வாதார திட்டத்தின் கீழ் துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மீன் வியாபாரத்திற்கான பெட்டிகள் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதியமைச்சர் எம்.எ.ல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான யு.எல்.எம்.என்.முபீன், கே.எல்.எம்.பரீட் கடற்றொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ்.ரி.ஜோர்ஜ் உட்பட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது 20 மீனவர்களுக்கான துவிச்சக்கர வண்டிகள் மற்றும் மீன் வியாபார பெட்டிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டதுடன் நிர் வழங்கள் திட்டத்துக்கான காசோலைகளும் சிறுவர் அபிவிருத்தி மகளிர் விகார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை, மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மீனவர்களுக்கு 'திவிநெகும' வாழ்வாதார திட்டத்தின் கீழ் துவிச்சக்கரவண்டிகள் மற்றும் மீன் விற்பனைக்கான பெட்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
மட்டக்களப்பு கடற்றொழில் திணைக்கள அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் 40 மீனவர்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொண்டு துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைத்தார்.
.jpg)
.jpg)
.jpg)
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago