Kogilavani / 2012 பெப்ரவரி 18 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தினை மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அதற்காக ஒதுக்கப்பட்ட காணியில் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை மாலை கல்லடி றிவைறா விடுதியில் நடைபெற்றது.
சீன அரசாங்கத்தின் உதவியுடன் இப்பீடத்திற்கான கட்டிடத்தின் ஆரம்பக்கட்ட வேலைகள் 360 மில்லியன் ரூபா செலவில் இடம் பெறவுள்ளன.
இக்கலந்துரையாடல் கூட்டத்தில், பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி டாக்டர் கே.கருணாகரன், அதன் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர் எம்.அருளானந்தன், புற்று நோய் வைத்திய ஆலோசகர் டாக்டர் திருமதி களியானி மிரண்டா பிரதியமைச்சரின் இணைப்பு செயலாளர் பொன் ரவீந்திரன் உட்பட விரிவுரையாளர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்காக உயர்கல்வியமைச்சின் அனுமதியும் பெறப்பட்டுளள்ளது. 2004ஆம் ஆண்டு இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 4500 மில்லியன் ரூபா இன்னும் பயன்படுத்தாமல் உள்ளது.
இந்த பீடத்தினை சகல வசதிகளுடனும் கூடிய வகையில் நிர்மானிப்பதற்கு உயர்கல்வியமைச்சின் உடாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தினை மட்டக்களப்பு பிள்ளையாரடியில் நிர்மாணிப்பதற்கான உதவியை பெறுவதற்காக சீன நாட்டு அதிகாரிகளை அன்மையில் அழைத்து வந்து இந்த இடத்தையும் பார்வையிட்டு சென்றுள்ளனர் என பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
.jpg)
.jpg)
56 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago