Kogilavani / 2012 பெப்ரவரி 19 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
உயிரைப் பணயம் வைத்து கடல் வளத்தை நாட்டிற்கு நல்கும் மீனவரைக் கொல்லாதீர்கள் என மட்டக்களப்பு மாவட்ட கடல்றொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் எஸ்.விவேகானந்தன் தெரிவித்தார்.
எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து சிலாபத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது மீனவர் கொல்லப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
தமது உயிரை துச்சமாக மதித்து கடலில் பல மைல் தூரம் பிரயாணம் செய்து நீண்ட நாள் மிதந்து கடல் வளத்தை நமது நாட்டிற்கு கொண்டுவந்து செல்வத்தை பெருக்கி வளம் மிக்க நாடாக மாற்ற விளையும் எமது மீனவர்கள் தமது தேவையின் நிமித்தம் ஜனநாயக நாட்டில் அகிம்சை முறையில் போராடும்போது துப்பாக்கியால் சுட்டுக் கொல்லாதீர்கள்.
சிலாபத்தில் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து நடைபெற்ற மீனவர் ஆர்ப்பாட்டத்தின்போது அப்பாவி மீனவன் அன்ரனி பெரினாண்டோ பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதை மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் அமைப்பு வன்மையாக கண்டிப்பதுடன் இதுபோன்ற துன்ப நிகழ்வுகள் நாட்டில் இடம்பெறாமல் இருக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மரணித்த அன்ரனி குடும்பத்தினருக்கு மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழிலாளர் சார்பாக ஆழ்ந்த அனுதாபத்தையும் கவலையையும் தெரிவிக்கும் அதேவேளை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு போதியளவு நிதியை நஷ்ட ஈடாக வழங்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago
4 hours ago