Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஸரீபா)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாத்தொகுதிக்கான விஜயமொன்றை இன்று திங்கட்கிழமை மேற்கொண்ட நகர விவகார சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி, அங்கு நடைபெற்ற பல அபிவிருத்தி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டார்.
முன்னாள் அமைச்சரும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் வேண்டுகோளுக்கு அமையவே நகர விவகார சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி கல்குடாத்தொகுதிக்கு விஜயம் செய்தார்.
கிழக்கு மாகாண கூட்டுறவு அமைச்சின் 10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட கோறளைப்பற்று மத்தி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகக் காரியாலயத் திறப்பு விழா, கொங்கிறீட்; வீதியாக அமைக்கப்பட்ட வாழைச்சேனை ஆலிம் வீதி திறப்பு விழா, ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசலுக்கு கணினி வழங்கிவைக்கும் நிகழ்வு, ஓட்டமாவடி எல்லை வீதி ஏ.எச்.எம்.பௌஸி மாவத்தையாக மாற்றப்பட்ட நிகழ்வு, ஓட்டமாவடியில் அமைக்கப்பட்ட ஈஸ்ட் கேட் ரவலஸ் திறப்பு விழா ஆகியவற்றில் பிரதம அதிதியாக நகர விவகார சிரேஸ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி கலந்துகொண்டார்.
இந்நிகழ்வுகளில் கிழக்கு மாகாண சுகாதார கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர், முன்னாள் அமைச்சரும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட், பிரதித் தவிசாளர் ஏ.எம்.நௌபர், பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago