Menaka Mookandi / 2012 பெப்ரவரி 20 , மு.ப. 11:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
சிறுபான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரேயொரு கிழக்கு மாகாண சபையில் எமக்கு வழங்க வேண்டிய அதிகாரங்களை பறிக்கப்போகின்ற நாடு நகர திட்டமிடல் திருத்த சட்டமூலத்தை நிராகரியுங்கள் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம் சபை உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடுநகர திட்டமிடல் திருத்தச் சட்ட மூலம் குறித்த ஒத்திவைக்கப்பட்ட விவாதம் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
13ஆவது திருத்தச் சட்டமூடாக மாகாண சபைக்கு வழங்கப்பட்ட, வழங்க வேண்டிய அதிகாரங்களையும் ஏனைய அதிகாரங்களையும் மத்திய அரசின் புத்தசாசன அமைச்சின் கீழ்கொண்டு வருவதற்கும் கையகப்படுத்துவதற்குமாக கடந்த ஜனவரி மாதம் 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நாடு நகரத் திட்டமிடற் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தை புத்தசாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சு கிழக்கு மாகாண ஆளுநர் ஊடாக கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்தை பெறுவதற்கு சமர்ப்பித்துள்ளது.
இதனைக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் சபை முதல்வர் முன்வைத்த போது இது தொடர்பாக தெளிவின்மையாலும், நேரம் போதாததாலும் ஒத்திவைக்குமாறு கோரப்பட்டது. இம்முடிவை சபை முதல்வர் ஆளுநருக்கு அறிவிக்க மீண்டும் சபையில் சமர்பிக்குமாறு சபை முதல்வரை ஆளுநர் பணித்ததின் பேரில் கடந்த 13இல் சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவித்தார்.
இதுதொடர்பாக கிழக்கு மாகாண சபையின் நியதிகள் சட்டக்குழு மட்டக்களப்பிலும் திருகோணமலையிலும் பல தடவைகள் சபை முதல்வர் தலைமையில் கலந்துரையாடல்கள் நடத்தியது. இவ்வேளையில் இச்சட்டமூலத்தை திருத்தத்துடன் ஆதரிப்பதாக ஆளும் தரப்பினரும் இச்சட்டமூலத்தை நிராகரிப்பதோடு எதிர்ப்பதாக எதிர்கட்சியினரும் தெரிவித்தனர்.
மீண்டும் கடந்த 13ஆம் திகதி கிழக்கு மாகாண சபையில் இது தொடர்பான விசேட அமர்வு நடந்தது. முதலமைச்சரக்ல் திருத்துவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டு அமைச்சர் உதுமாலெவ்வையினால் வழிமொழியப்பட்டு சபை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் சபை முதல்வர் தலைமையில் கலந்துரையாடல் நடத்தப்பட்டு இதிலும் இரண்டு விதமான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு எதிர்க் கட்சியினராகிய நாங்கள் இதை நிராகரிப்பதாகவும் எதிர்ப்பாதாகவும் கூறி கலந்துரையாடலை தவிர்த்துக் கொண்டோம்.
மீண்டும் 13ஆம் திகதி சபை கூடியது. அமைச்சர் உதுமாலெவ்வை திருத்தப் பிரேரணை தொடர்பாக விவாதத்தை ஆதரித்துப் பேசினார். இச்சந்தர்ப்பத்தில் எதிர்க்கட்சியினராகிய ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லீம் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ்., ஜே.வி.பி. உறுப்பினர்களாகிய நாங்கள் திருத்தப் பிரேரணை சட்டத்திற்கு முரணாக முன்வைக்கப்படுவதாலும் சரியான முறையாக இச்சபைக் கூட்டம் கூட்டப்படவில்லை எனவும் இதற்கான விளக்கத்தை சபை முதல்வர் தரவேண்டும் எனவும் கேள்வி எழுப்பினோம்.
பதிலளிக்கதவறியதால் எழுந்து நின்று எங்களது ஆட்சேபனையை தெரிவித்தோம். இவ் வேளையில் ஆளும்தரப்பினர் அனைவரும் எழுந்து நின்று சட்டத் திருத்தத்தை ஆதரித்து பேசிக்கொண்டிருந்தனர். எதிர்க் கட்சியினரோ தொடர்ந்தும் தவறான முறையில் இச்சபையை சபைமுதல்வர் கூட்டமுடியாதெனத் தெரிவித்தோம்.
இதன்காரணமாக சபையில் ஆக்ரோசமான வாக்குவாதம் நடைபெற்றது. இரு பகுதியினரும் மாறிமாறிகருத்துக்களை தெரிவித்துக் கொண்டே இருந்தனர். எமது நியாயங்களை நாம் உறுதியாகமுன்வைத்தோம். சபையை நடத்த உறுப்பினர்கள் ஒத்துழைக்காததால் சபை ஒத்திவைக்கப்பட்டுமீண்டும் சபை முதல்வர் சபையை கூட்டி சபைக் கூட்டத்தை எதிர்வரும் 28ஆம் திகதிவரை ஒத்திவைத்தார்.
கிழக்குமாகாண சபைக்கு வழங்கப்பட வேண்டிய அதிகாரங்களை புத்தசாசன அமைச்சுகபளீகரம் செய்வதற்கு கிழக்கு மாகாண சபை சிறுபான்மை கட்சிகள் துணைபோக மாட்டார்கள் எனநம்பினோம். இது வேறு வடிவத்தில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. எமக்குரியஅதிகாரங்களை நாமேதிருத்தி மத்திய அரசுக்கு தாரை வார்க்கும் வேலையை ஏற்றுக் கொள்ளமுடியாது. மத்திய அரசை திருப்த்திப்படுத்துவதற்கு ஆளும் தரப்பிலுள்ள சிறுபான்மைகட்சிகளுக்கு இது தருணமல்ல.
அதிகாரப்பரவலாக்கல் தொடர்பாக வெளிநாடுகள் ஆர்வத்துடன் இருக்கும் போதும் பேச்சுவார்த்தைநடைபெறுகையிலும் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை இனப் பிரச்சினை தொடர்பாக விளிப்படைந்தநிலையில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உரிமையை பெறுவதா அல்லது கபளீகரத்துக்குதுணைபோவதா? திருத்தம் ஊடாக புத்தசாசன அமைச்சுக்கு எமது அதிகாரத்தை வழங்கஉங்களுக்கு எந்த மக்களும் வாக்களிக்கவில்லை. இதை மறுக்க முடியாவிட்டால் இதிலிருந்து ஒதுங்குங்கள்!
இழப்பில்உருவாக்கப்பட்ட மாகாண சபை அதிகாரங்களை ஒரு சிலர் சுயநலத்துக்காக அழிக்க முடியாது.இந் நாட்டில் உள்ள சிறுபான்மை இனத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரேயொரு மாகாணசபை கிழக்கு மாகாண சபை என்பதை மறந்துவிடக் கூடாது. இச் சபையில் தான் எமது ஆளுகைகள்இருக்க வேண்டும். எனவே எதிர்வரும் 28 ஆம் திகதி மீண்டும் சபையில் முன்வைக்கப்படவிருக்கும் இச்சட்டமூலத்தை உறுதியாக நிராகரிக்குமாறும் கேட்டுள்ளார்.
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago