Menaka Mookandi / 2012 பெப்ரவரி 20 , பி.ப. 12:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
மீனவர்களுக்கு மானிய அடிப்படையில் எரிபொருட்கள் வழங்கவிருப்பதுபோல் விவசாயிகளுக்கும் மானியம் வழங்கப்பட வேண்டுமென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பெற்றோலிய வளங்கள் அமைச்சர் சுசில் பிறேமஜயந்தவிற்கு அனுப்பிவைத்துள்ள அவசரகடித்திலேயே இந்தகோரிக்கையை அவர் முன்னவைத்துள்ளார் அக்கடிதம் வருமாறு,
'அரசாங்கத்தினால் அண்மையில் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை தாங்கள் அறிவீர்கள். எரிபொருட்களின் விலையேற்றம் காரணமாக அரசாங்கத்தினாலே மின்கட்டணம் மற்றும் போக்குவரத்துக் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. குழாய்நீர் கட்டணமும் எந்நேரத்திலம் அதிகரிக்கப்படலாமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இதனைவிட பால்மா, அரிசி உட்பட அத்தியாவசிய பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருவதால் மக்கள் வாழ்வாதாரம் தொடர்பாக நெருக்கடியை எதிர்நோக்குகிறார்கள். எரிபொருள் விலையேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து குறிப்பாக மீனவர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவரும் வேளையில் அவர்களுக்கு மானிய அடிப்படையில் எரிபொருட்கள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவுசெய்யப்பட்ட தனியார் போக்குவரத்து துறையினருக்கும் இந்தமானியம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிகிறேன். இந்த விடயத்தில் விவசாயிகள் புறக்கணிக்ப்பட்டிருப்பது குறித்து பலரும் எனது கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்கள்.
எமதுநாட்டில் விவசாயத்தைப் பொறுத்தவரை இயந்திரங்களே உழவு தொடக்கம் அறுவடைவரை அனேகமான விவசாயிகளினால் தற்போது பயன்படுத்தப்படுகிறன. குறிப்பாக தற்போது கனரக அறுவடை இயந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் எரிபொருட்களின் விலை அதிகரித்திருப்பது விவசாயிகளை பெரிதும் பாதித்துள்ளது.
எமது மாவட்டத்தில் எரிபொருள் விலை அதிகரிப்புக்கு முன்னர் ஏக்கருக்கு ரூபா 2750 தொடக்கம் 3000 வரை அறவீடு செய்யப்பட்ட அறுபடை இயந்திரக்கூலி தற்போது ரூபா 4250 தொடக்கம் 4500 வரை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
எனவே பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு விமோசனமளிக்கும் வகையில் மானிய அடிப்படையில் எரிபொருட்கள் வழங்குவது போல் விவசாயிகளுக்கம் வழங்குவது குறித்து கவனம் செலுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்' என அக்கடித்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
58 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago