2026 மே 14, வியாழக்கிழமை

காத்தான்குடியில் இரு குழுக்களுக்கிடையில் கைகலப்பு; ஐவர் காயம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடிப் பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் இடம்பெற்ற கைகலப்பில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி கப்பல் ஆலீம் வீதியில் உள்ள தாறுல் அதர் பள்ளிவாசலுக்கு முன்பாக இரண்டு மார்க்க ரீதியான குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் பின்னர் கைகலப்பாக மாறியதாகவும் காத்தான்குடி பொலிஸார் கூறினர்.

இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களில்  நான்கு பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் மற்றுமொருவர் ஆரையம்பதி வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .