Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 21 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி ஆற்றங்கரையோரத்தில் வெட்டப்பட்ட பசுமாட்டின் உயிரிழந்த சினைக்குட்டியொன்று நேற்று திங்கட்கிழமை பொலிஸாரினால் மீட்கப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது.
வெட்டப்பட்ட பசுமாட்டின் உயிரிழந்த சினைக்குட்டியொன்று காத்தான்குடி முதலாம் குறிச்சி ஆற்றங்கரையோரத்தில் வீசப்பட்டுக் கிடப்பதைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக காத்தான்குடிப் பொலிஸாருக்கு தகவல் வழங்கினர். இதனைத் தொடர்ந்து அவ்விடத்திற்குச் சென்ற பொலிஸார் உயிரிழந்த நிலையிலுள்ள அச்சினைக்குட்டியை மீட்டு புதைத்துள்ளனர்.
இச்சினைக்குட்டியை வீசிய சந்தேக நபரை கைதுசெய்யவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, பசுமாடுகளை வெட்டக்கூடாதென்று காத்தான்குடி நகர சபை கண்டிப்புடன் தெரிவித்துள்ளது. பசுமாடொன்று களவாக அறுக்கப்பட்டு அதன் சினைக்குட்டி வீசப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதாகவும் காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார்.
.jpg)
32 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
1 hours ago
4 hours ago