2026 மே 09, சனிக்கிழமை

கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                                       

                                                                       (ரி.லோஹித்,எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புதுக்குடியிருப்பு புளியடி வீதியில் கத்திக் குத்துக்கு இலக்கான நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சின்னத்தம்பி இளையதம்பி (வயது 63) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

நேற்று செவ்வாய்க்கிழமை மாலை  6.30 மணியளவில் தனது தோட்டத்துக்கு சைக்கிளில் இந்நபர் சென்றிருந்த நிலையிலேயே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி அப்துல்லா சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரணையை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா  வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்குமாறு காத்தான்குடி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இந்த மரணம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0

  • ameerudeen Wednesday, 22 February 2012 03:56 PM

    இப்படியான செயற்பாடுகள் மிகவும் கண்டிக்கத் தக்கது. மானுட நேயத்துக்கே பொருத்தமற்றது. நாட்டில் இதுபோன்ற செயல்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .