2026 மே 09, சனிக்கிழமை

வந்தாறுமூலை, பலாச்சோலை கிராமங்களுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் விஜயம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்,ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வந்தாறுமூலை,  பலாச்சோலை கிராமங்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

வந்தாறுமூலை மற்றும் பலாச்சோலை கிராமங்களுக்கு  நேற்று செவ்வாய்க்கிழமை மாலை சென்ற முதலமைச்சர் அக்கிராமங்களிலுள்ள பின்தங்கிய பகுதிகளை பார்வையிட்டதுடன், அங்குள்ள மக்களின் குறைநிறைகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.

இதன்போதே அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளையும் ஜீவனோபாய உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைளையும் முன்னெடுப்பதாகவும் அவர் கூறினார்.  


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .