2026 மே 09, சனிக்கிழமை

dd

'தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் மௌலவியை தாக்கியவர் கைது செய்யப்படாவிட்டால் வீதியில் இறங்கி போராடுவோம்'

Super User   / 2012 பெப்ரவரி 22 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

"காத்தான்குடியிலுள்ள தேசிய தௌஹீத் ஜமாஅத்தை  சேர்ந்த மௌலவியை தாக்கியவர் பொலிஸாரால் கைது செய்யப்படல் வேண்டும். இல்லையேல் சந்தேகநபரை கைது செய்ய கோரி எமது ஜமா அத்தை சேர்ந்தவர்கள் வீதியில் இறங்கி போராட வேண்டி ஏற்படும்" என தேசிய தௌஹீத் ஜமாஅத் நேற்று புதன்கிழமை தெரிவித்தது.

காத்தான்குடியில் நடாத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டது. அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜமாஅத்தின் தலைவர் மௌலவி எம்.எசி.ஸஹ்றான்,

"தேசிய தௌஹீத் ஜமா அத் ஒரு இஸ்லாமிய பிரச்சார அமைப்பாகும். நாம் இஸ்லாமிய பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றோhம்.
இந்நிலையில் எமது தேசிய தௌஹீத் ஜமாஅத்தை சேர்ந்த உலமாக்கள் பல தடவைகளில் தக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக கடந்த திங்கட்கிழமை மாலை எமது ஜமாஅத்தின் தௌபீக் மௌலவி என்பவர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரை தாக்கிய காத்தான்குடி தாறுல் அதர் முக்கியஸ்த்தரான நசார் என்பவருக்கு எதிராக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளோம்.

ஆனால் இதுவரை அந்த நபரை பொலிஸார் கைது செய்யவில்லை. இதன் பின்னணியில் எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக நாம் தாக்கப்பட்டு வருகின்றோம். இதை கண்டித்தும் குறித்த சந்தேகநபரை கைது செய்ய கோரியும் நாம் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளோம்" என்றார்.


  Comments - 0

  • zeeham Thursday, 23 February 2012 04:10 AM

    தௌஹீத் ஜமாஅத்தை சேர்ந்த மௌலவியை ?????

    Reply : 0       0

    ahamed Thursday, 23 February 2012 04:26 AM

    ஏன் இவ்வாறு??

    Reply : 0       0

    haleemraja Thursday, 23 February 2012 03:19 PM

    ம்ம் nadaththunga

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .