2026 மே 09, சனிக்கிழமை

dd

நாவற்காட்டில் பொலிஸ் நடமாடும் சேவை

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

வவுணதீவு பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் வவுணதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மட்.நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தில் நாளை மறுதினம் சனிக்கிழமை பொலிஸ் நடமாடும் சேவை நடைபெறவுள்ளது.

வவுணதீவு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலங்க பெர்னாண்டோ மற்றும் பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ஆ.ஐ.உவைஸ் ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இப்பொலிஸ் நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லால் செனவிரெத்ன கலந்துகொள்ளவுள்ளார்.

பொலிஸார் பொதுமக்களின் உறவினை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் நலன்கருதி ஏற்பாடு செய்துள்ள இந்த நடமாடும் சேவையூடாக பல்வேறு சேவைகள் வழங்கப்படவுள்ளன.

பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கல், காலங்கடந்த பதிவினைச் செய்தல், பொலிஸ் முறைப்பாடு, முறைப்பாட்டு பிரதியினை பெற்றுக்கொள்ளல், தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம், கடவுச்சீட்டு என்பவற்றிற்கு விண்ணப்பித்தல், இலவச வைத்திய முகாம், வங்கி, காப்புறுதிச் சேவை, இரத்த பரிசோதனை, பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை உபகரணம் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் இடம்பெற உள்ளதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் தொடர்பு அதிகாரி ஆ.ஐ.உவைஸ், இதில் அனைத்து பொதுமக்களையும் பங்கு கொண்டு பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .