2026 மே 09, சனிக்கிழமை

dd

மட்டக்களப்பில் கொலைச் சந்தேகநபரென கைதானவர் தற்கொலை முயற்சி

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 23 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் விஷம் அருந்தியதால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புதுக்குடியிருப்பில் நேற்று கொலை செய்யப்பட்ட சின்னத்தம்பி இளைய தம்பி என்பவரின் கொலை தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட புதுக்குடியிருப்பு கடற்கரை வீதியைச் சேர்ந்த ஒருவரே விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டவராவார்.

இச்சம்பவத்தை அடுத்து மேற்படி சந்தேக நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மேற்படி கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .