Kogilavani / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 08:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைச்சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு வழங்க மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் பணிப்புரையின் கீழ் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு கிழக்கு மாகாணசபையின் பாலர் பாடசாலைகள் பணியகத்தினால் இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற்து.
பாலர் பாடசாலைகள் பணியகத்தின் செயலாற்று பணிப்பாளர் ரி.கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற
இச்செயலமர்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான பு.பிரசாந்தன் இரா.துரைரட்ணம் மாகாண பாலர் பாடசாலைகள் பணியக தலைவர் என்.நடராசா அம்பாறை மாவட்ட தலைவர் ஏ.எல்.எம்.இப்றாஹீம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 3000ரூபாய் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.
.jpg)
.jpg)
29 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago