2026 மே 09, சனிக்கிழமை

மட்டு. வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி,ஜிப்ரான்,ரி.லோஹித்)

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையின் ஆசிரியர்கள் இன்று வெள்ளிக்கிழமை  வகுப்புக்களை பகிஷ்கரித்து ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

நேற்று வியாழக்கிழமை இப்பாடசாலைக்கு வானொன்றில் வந்த குழுவினர் இப்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களை அச்சுறுத்தி அவமானப்படுத்தியமையைக் கண்டித்தே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை வளாகத்தினுள் சுலோகங்களை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்களுக்கு பெற்றோர்கள் சிலரும் பாடசாலை  நுழைவாயிலில்  நின்று ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்வரும் திங்கட்கிழமை மாகாண கல்வியமைச்சின் செயலாளர் இப்பாடசாலைக்கு சமூகமளித்து இப்பிரச்சினைக்கு தீர்மானதொரு முடிவெடுப்பாரென மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் பவளக்காந்தன் ஆசிரியர்களுக்கு உறுதிமொழி வழங்கியதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர தேசிய பாடசாலையில் நிறுவப்பட்டிருந்த சரஸ்வதியின் சிலை எதிர்ப்புக் காரணமாக அங்கிருந்து அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .