Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 24 , மு.ப. 09:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
நாடு, நகர திட்டமிடல் திருத்தச் சட்டமூலம் தொடர்பான அடுத்த விவாதம் எதிர்வரும் 28ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு ஒரு நாள் முன்னதாக மாகாண சபை அமர்வு நடைபெறும் என கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவித்துள்ளார்.
தற்போது மாகாண சபைகளின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள நாடு, நகர திருத்தச் சட்டமூலம் கடந்த 13ஆம் திகதி கிழக்கு மாகாண சபையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டபோது, அதில் குறிப்பிட்ட சில மாற்றங்களை செய்து தரும்படி மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது. அத்துடன் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பும் கடுமையாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து எதிர்வரும் 28ஆம் திகதி சபை அமர்வு நடைபெறும் என தவிசாளர் பாயிஸ் அறிவித்திருந்தார். தற்போது இச்சபை 27ஆம் திகதி கூடும் என அவர் அறிவித்திருக்கிறார்.
இதன்போது நாடு நகர திருத்தச் சட்டமூலம் திருத்தங்களுடன் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
9 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago
neethan Saturday, 25 February 2012 03:58 AM
எந்த வகையான திருத்தங்களோ? எதுவாக இருந்தாலும் தமிழ் மொழி பேசுவோரின் நூறு சதவீத மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யகூடியதாக அமையாது என்பது மட்டும் உண்மை.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago