Kogilavani / 2012 பெப்ரவரி 26 , மு.ப. 04:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி, ஜிப்ரான், லோஹித்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை வடக்கு கல்வி கோட்டத்திலுள்ள பாடசாலை அதிபர்களுடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான விடே கலந்துரையாடல் நேற்று சனிக்கிழமை கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் இக்கலந்துரையாடலை ஏற்படுத்தியிருந்தார்.
இதன்போது, குறிப்பிட்ட ஒன்பது பாடசாலை தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பாடசாலைகளின் பரீட்சை அடைவு மட்டங்கள் தொடர்பாக ஓர் விளக்க உரை நிகழ்த்தப்பட்டது.
குறிப்பாக 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த.சாதாரணதர பரீட்சை மற்றும் க.பொ.த.உயர்தர பரீடசை ஆகியவற்றின் இறுதி 3வருட பெறுபேறுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு எதிர் காலத்தில் அடைவு மட்டங்களை கூட்டுவது தொடர்பில் ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
குறிப்பாக முதலமைச்சர் சார்பில் குறித்த 9 பாடசாலைகளினது பரிட்சைப் பெறுபேறுகளை உள்ளடக்கி ஓர் பகுப்பாய்வு செய்யப்பட்டு அது தொடாபிலான முழுமையான விளக்கம் முதலமைச்சரினால் வழங்கப்பட்டது.
இவ்வாறாக தேர்வு செய்யப்பட்ட பாடசாலைகளாக மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயம், நாவற்குடா தருமரெட்ணம் வித்தியாலயம், மஞ்சந்தொடுவாய் விநாயகர் வித்தியாலயம், கல்லடி முகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயம், கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயம், கல்லடி வேலூர் ஸ்ரீ கச்தி வித்தியாலயம், கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் வித்தியாலயம், கல்லடி உப்போடை சிவானந்தா வித்தியாலயம் என்பனவாகும்.
இவ் விசே கலந்துரையாடலில் மட்டக்களப்பு வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி எஸ்.பவளகாந்தன், பிரதிக் கல்வி பணிப்பாளர் க.சத்தியநாதன், கோட்டக்கல்வி அதிகாரி டேவிட், கல்வி அபிவிருத்தி திட்டமிடல் அதிகாரி, கல்லடி கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தேவசிங்கன், பாடசாலைகளின் அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாதர் அபிவிருத்தி சஙக உறுப்பினர்களும் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களையும் தெரிவித்தார்கள்.
.jpg)
.jpg)
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago
3 hours ago