Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 27 , மு.ப. 03:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி, ரி.லோஹித்)
மட்டக்களப்பு முகத்துவாரம் களப்பை அண்டிய பகுதியில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்கா நேற்றுமுன்தினம் சனிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.
மரயன் நிறுவனத்தினால் அமைக்கபட்ட இப்பூங்காவை கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் திறந்துவைத்தார்.
சிறுவர்களுக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட படகுச் சேவைகளும் வெளிநாட்டவர்களை கவரக்கூடிய வகையில் தோணி மற்றும் படகுச் சேவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மாநகர மேயர் திருமதி சிவகீத்தா பிரபாகரன், பிரதி மேயர் ஜோர்ச்பிள்ளை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் நெடுஞ்செழியன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி கலாமதி பத்மராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
29 minute ago
3 hours ago
sahabdeen Friday, 02 March 2012 10:23 PM
ஏற்கனவே உள்ளவையை முதலில் clean பன்னோங்கோ
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago