2026 மே 09, சனிக்கிழமை

கடலில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 27 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி கடலில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது.

பெரியகல்லாறு, கடலம்மன் வீதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி அரவிந்தன் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

களுவாஞ்சிக்குடி கடலில் நண்பர்கள் சிலருடன் நீராடிக்கொண்டிருந்தபோதே இவர் நீரில் மூழ்கியதாகவும் கரைக்கு எடுத்து வந்தபோது அவர் உயிரிழந்துள்ளதாகவும் களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .