Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 27 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளையை அவரது அலுவலக அறையில் மாநகரசபை உறுப்பினர் ஒருவர் வைத்து பூட்டியமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் சிவகீதா பிரபாகரன் தெரிவித்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாநகரசபையில் உள்ள பிரதி மேயரின் அலுவலக அறையில் வைத்து மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் பூட்டப்பட்டதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
மாநகர பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளையை அவரது அலுவலக அறையில் வைத்து மாநகர சபை உறுப்பினரான தவராசா பூட்டியமை தவறானது. இது தொடர்பில் பிரதி முதல்வர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் எனவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் குறித்த மாநகர சபை உறுப்பினர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் அமைக்கப்பட்டு அகற்றப்பட்ட சரஸ்வதி சிலை தொடர்பான முரண்பாடு காரணமாகவே குழப்பமான நிலைமை ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர பிரதி மேயர் ஜோர்ஜ்பிள்ளை தெரிவித்தார். இது ஒரு அடாவடித்தனமான செயல் என கண்டித்துள்ள அவர், இது தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, இவ்விடயம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனிடம் கேட்டபோது, இது மாநகர சபையினுள் நடந்த சம்பவம் என்ற படியால் இது தொடர்பில் முழுமையான நடவடிக்கையினை மாநகர முதல்வரே எடுக்க வேண்டும் என தெரிவித்தார். இது தொடர்பில் தாம் முழு அவதானிப்பில் இருப்பதாகவும் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.
15 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago