2026 மே 09, சனிக்கிழமை

dd

மட்டு. வின்சன்ட் மகளிர் பாடசாலையில் மீண்டும் சரஸ்வதி சிலை

Super User   / 2012 பெப்ரவரி 27 , மு.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தர தேசிய பாடசாலையில் கடந்த 22ஆம் திகதி வைக்கப்பட்டு சில மணித்தியாலங்களில் அகற்றப்பட்ட சரஸ்வதி சிலை மாணவர்களினால் இன்று திங்கட்கிழமை மீண்டும் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

முன்னர் இச்சிலை வைக்கப்பட்ட போது மட்டக்களப்பு மெதடிஸ்ற்  திருச்சபையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் குறித்த சிலையை அகற்றுமாறு கோரி மெதடிஸ்தற் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மட்டு. வின்சன்ட் மகளிர் பாடசாலை கட்டிட திறப்பு விழாவிற்கு வருகை தரவிருந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த சிலை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் எம்.ரி.நிசாம் மட்டு. வின்சன்ட் மகளிர் பாடசாலைக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்டார்.

இதன்போது, சுமார் 90 சதவீதமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள் சிலை நிறுவப்பட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனால், மட்டக்களப்பு மெதடிஸ்ற் திருச்சபையினர் சிலை நிறுவப்பட்டுவதற்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் எம்.ரி.நிசாமிடம் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சிலை நிறுவுவது தொடர்பில் இறுதி முடிவு எடுப்பதற்கு ஒரு மாத அவகாசம் வழங்குமாறு கோரி மாகாண கல்வி அமைச்சின் பிரதி செயலாளர் எம்.ரி.நிசாம் சென்றுள்ளார்.

இதேவேளை, பாடசாலை முடிவடையும் நேரத்தில் மாணவர்களினால் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் அறையொன்றினுள் வைத்து பூட்டப்பட்ட நிலையில் முன்னர் சிலை வைக்கப்பட்டிருந்த அதே இடத்தில் சரஸ்வதி சிலை மீண்டும் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து பாடசாலை வளவுக்குள் எவரும் நுழைய அனுமதிக்காது நுழைவாயிலை மாணவர்கள் பூட்டியதுடன் சிலை அகற்றப்படமாட்டாது என்ற உத்தரவாதம் அதிகாரிகளால் வழங்கப்பட்ட பின்னரே பாடசாலையின் நுழைவாயில் திறக்கப்படும் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நவரட்ன பண்டார பாடசாலைக்கு சென்று மாணவர்களுக்கு வழங்கிய உத்தரவாதத்தை அடுதது, நுழைவாயில் திறக்கப்பட்டதுடன் மாணவர்களும் பாடசாலையை விட்டு வெளியேறினர்.

குறித்த சிலை எவராலும் அகற்றப்படமாட்டாது என பொலிஸார் இதன்போது உறுதியளித்துள்ளனர். அதனை மீறி அகற்றுவது என்றால் நீதிமன்ற அனுமதியுடனேயே அகற்றப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சிலைக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என மாணவர்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


  Comments - 0

  • ram Monday, 27 February 2012 11:35 PM

    மாணவர்களே மதம் என்பது உங்களுடையது தனிபட்ட சொத்து அல்ல. தயவு செய்து மத வெறியர்களாக மாறாதீர்கள். சரஸ்வதி என்பது இந்து மதக்கடவுள், கல்வியின் பொது சின்னம் அல்ல. நீங்கள் படிக்கும் பாடசாலை உங்களால் தெரிவு செய்யப்பட்டது. உங்களுக்கு சம்மதம் இல்லை என்றால் வேறு பாடசாலைக்கு மாறலாம். பாடசாலை சூழ்நிலையை மாற்ற வேண்டாம்.

    Reply : 0       0

    Iya Monday, 27 February 2012 11:43 PM

    மாணவிகளின் முயற்சியைப் பாராட்டுகிறேன். இதில் எவரும் தலையிடக்கூடாது. ஒவ்வொரு மதத்தவரும் மற்றைய மதத்தை மதிக்க வேண்டும்.

    Reply : 0       0

    neethan Tuesday, 28 February 2012 12:03 AM

    ஏசு பிரானின் திருச்சிலையை, இந்து கல்லூரியில் வைப்பதற்கு இந்து மாணவர்களும் பெற்றோர்களும் அனுமதிப்பார்களா? சரஸ்வதியை வைத்து வணங்குவதால் மட்டும் கல்வி கிடைத்துவிடாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். மத வெறி இந்த நாட்டில் யாருக்குமே வேண்டாம்.

    Reply : 0       0

    Public opinion Tuesday, 28 February 2012 12:18 AM

    Ovvoru padasalaikalukkum ovvoru parampariyam enru onru undu. Thamilar pakuthikalil putthar silakali niruvuvathu ponrathey ithu. Inthukkal vetka paadakkoodiya vidayam.

    Reply : 0       0

    priya Tuesday, 28 February 2012 12:21 AM

    மாணவிகளுக்கு எனது வாழ்த்துக்கள்...

    Reply : 0       0

    sammathan Tuesday, 28 February 2012 02:37 AM

    பெரும்பன்மையனவர்களுக்கு முதல் இடமென்பது ஜனநாயகம். ஆனால் எல்லோருக்கும் அவரவர் கடவுளை அவரவர் பாடசாலையில் வணக்கும் உரிமை உண்டு. இது மத வெறியா?

    Reply : 0       0

    Mano Tuesday, 28 February 2012 03:55 AM

    இந்த உலகத்தில் தன் தாய் மொழியையும் , தாய் மதத்தையும் வெறுக்கும் ஒரே இனம் தமிழினம்தான், தமிழர்களின் தாய் மதம் இந்து மதம் என்பதை தமிழர்கள் உணர வேண்டும். மத மாற்றத்தால் தமிழர்கள் தன் கலாசாரத்தை இழக்கின்றனர், தமிழர் என்ற அடையாளத்தையும் இழக்கின்றனர்.
    இலங்கையில் தமிழர் வாழும் கிழக்கு மாகானத்திலும், மலையகத்திலுமே அதிகமாக மதமாற்றம் நிகழ்கிறது என்பது வேதனைக்குரியதாகும்.
    தமிழர்களே வறுமைக்காக மதம் மாறுவதை தவிருங்கள்.

    Reply : 0       0

    hrish Tuesday, 28 February 2012 04:07 AM

    இந்த சிலை இப்பதானா இவர்களின் கண்ணுக்கு தெரிந்தது? தேவை இல்லாமல் மாணவர்களுக்குள் மத வெறியை ஏற்படுத்தாமல் அவர்களை படிக்க விடுங்கள்.

    Reply : 0       0

    siven Tuesday, 28 February 2012 04:35 AM

    இனிமேலவேது.. தமிழினம் மிசனரிகளின் பிடியில் இருந்து விடுபடட்டும்... விழிப்படைந்து ... தமது மதத்தை பாது காக்க போரடுவோம்.

    Reply : 0       0

    1 christian Tuesday, 28 February 2012 05:23 AM

    பிதாவே இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னது என்று அறியாதிருகிரார்கள்.

    Reply : 0       0

    SAKARAM Tuesday, 28 February 2012 05:42 AM

    வை தீஸ் மத வெறி ,இன வெறி, மொழி வெறி?

    Reply : 0       0

    Rajani Tuesday, 28 February 2012 01:55 PM

    இது பெரும்பான்மை இனம் சிறுபான்மையினரை ஒடுக்குவது போல் உள்ளது. இந்துக்கள் சிறுபான்மை கிறிஸ்தவர்களை ஒடுக்க நினைத்தால் அவர்கள் சிங்களவர்களை ஆதரிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாக முடியும்.

    Reply : 0       0

    nadunilaiyalan Tuesday, 28 February 2012 06:40 PM

    சும்மா இருந்த பாடசாலையை குழப்பி, சரஸ்வதிக்கு போலீஸ் காவல். தேவையா இது? நாளைக்கு அவர்கள் புத்தர் சிலை வைப்பார்கள். அப்போது தாய் மதம், தகப்பன் மதம், கலாச்சாரம் எல்லாம் தெரியும்.

    Reply : 0       0

    raj Wednesday, 29 February 2012 01:34 AM

    புத்தர் சிலை எல்லா பாடசாலைகளிலும் வைக்க நேர்ந்தால் மாணவர்கள் ( மாணவிகள் )எதிர்க்க போகிறார்கள் , இது
    சமயத்துக்கு எதிரானதாக கருதப்படமாட்டாது. அரசாங்கத்துக்கு எதிரானதாகி விடும்.
    அப்பொழுது தாய் தந்தையர்கள் சிறைச்சாலை வாசலில் அழுது புரள வேண்டும்
    இப்படி அதிரடி நடவடிக்கை எடுக்க இயலாதுங்கோ ................

    சிலை வைத்து மத்தத்துக்கு விலை போகாதே ....
    சிலை வைக்காதே என்று நீ
    மதத்தில் மதம் கொள்ளாதே...
    ஊரில் உள்ளவனெல்லாம் ஒருவேளை
    உணவின்றி பட்டிணியாம்
    தேரிழுத்து தெருவெல்லாம் சிலைகளுக்கு
    மாலை போட்டு ஊர்வலமாம் ...
    மானமுள்ள மனிதா ! ???? உன்
    மனச்சாட்சி எங்கே ?
    வேதம் மட்டும் போதும்-உன்
    வெள்ளை மனது வாழ ...
    பாழாய்ப்போன மனிதா என்றும்
    அடக்கியாளு உன்மனதை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .