2026 மே 09, சனிக்கிழமை

dd

படுவான்கரையில் யானை மர்ம மரணம்

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 27 , பி.ப. 01:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா, ஜதுசன்)

மட்டக்களப்பு, படுவான்கரைப் பிரதேசத்திற்குட்பட்ட விவேகானந்தபுரம் கிராமத்தில் காட்டு யானை ஒன்றின் சடலத்தை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மீட்டனர். சுமார் 25 முதல் 30 வயது மதிக்கத்தக்க இந்த யானை 7 அடி உயரமானது என வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

கிராமவாசிகள் வழங்கிய தகவலை அடுத்து மீட்கப்பட்ட இந்த யானை எவ்வாறு இறந்துள்ளது என்று கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் யானையின் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக  அனுப்பிவைக்கப்பட்டுள்ளன என்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .