Super User / 2012 பெப்ரவரி 28 , பி.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
காத்தான்குடி நகர சபை உறுப்பினரும் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் பணிப்பாளருமான சல்மா ஹம்ஸா பெண்களின் மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை(2) அமெரிக்கா பயணமாகவுள்ளார்.
இந்த மாநாடு பெண்களின் வலுவூட்டல், பெண்களின் சுகாதாரம், பெண்களின் பொருளாதாரமும் அபிவிருத்தி மற்றும் பெண்களின் சமூக அரசியல் போன்ற தலைப்புக்களில் நடைபெறவுள்ளது.
இந்த மாநாடு மார்ச் 4ஆம் திகதி முதல் மார்ச் 24ஆம் திகதி வரை அமெரிக்காவின் வாசிங்டன், நியூயோர்க், புளோரிடா மற்றும் நெவாடா ஆகிய இடங்களில் இ நடைபெறவுள்ளது.
இதன்போது, சல்மா ஹம்ஸா பெண்களின் பின்தங்கிய நிலை மற்றும் பெண்களின் தலைமைத்துவம் ஆகிய தலைப்புக்களில் சிறப்பு உரையாற்றவுள்ளார்.
உலகின் பல நாடுகளில் இருந்து பல பெண்கள் கலந்தும் இந்த மாநாட்டில் இலங்கையிலிருந்து கலந்து கொள்ளும் ஒரேயொரு பெண் பிரதிநிதி சல்மா ஹம்சா என்பது குறிப்பிடத்தக்கது.
15 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
Avathani Wednesday, 29 February 2012 03:23 PM
வாழ்த்துக்கள் சல்மா அவர்களே...
உங்களின் முயற்சியும் பங்குபற்றலும் பாராட்டத்தக்கவை...
Reply : 0 0
hisfullah khan Thursday, 01 March 2012 08:41 AM
good luck
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago