2026 மே 09, சனிக்கிழமை

dd

மட்டு. வின்சன்ட் மகளிர் பாடசாலையில் சரஸ்வதி சிலை மீளவைக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்றம் செல்ல ஏற்பாட

Suganthini Ratnam   / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர்தர பாடசாலையில் சரஸ்வதி சிலை மீளவைக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் செயலாளர் அருட்திரு எஸ்.ஜே.கதிரேசபிள்ளை தெரிவித்தார்.

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இச்சிலை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் உயர்மட்டக் குழுவொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்புக்கு வருகை தந்தது. இதன்போது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டது. இச்சிலை விவகாரம் தொடர்பில் சுமுகமான தீர்வைக் காண்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் எடுக்கப்பட்ட முயற்சிகள் பலனிக்காத நிலையில் அடுத்த கட்டமாக நீதிமன்றத்திற்கு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தினால் இப்பாடசாலை 1961ஆம் ஆண்டு பொறுப்பேற்கப்பட்டபோது இப்பாடசாலையில் மாற்றங்கள் ஏதாவது மேற்கொள்ளப்படுவதாயின்; திருச்சபையின் கருத்துக்கள் பெறப்படல் வேண்டுமென நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.  அது தற்போது மீறப்பட்டுள்ளதாகவும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் செயலாளர் தெரிவித்தார்.

மெதடிஸ்த திருச்சபையினால் மட்டக்களப்பு நகரில் 192 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலையில் சிலை வைக்கப்பட்டமையானது பாடசாலையை அரசாங்கத்திடம் கையளிக்கும்போது அரசாங்கத்தினால் திருச்சபைக்கு வழங்கப்பட்ட உத்தரவாதம்  மீறப்பட்ட செயலாகுமெனவும் அவர் கூறினார். இது குறித்து மெதடிஸ்;த திருச்சபை கவலையடைவதாகவும் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின் செயலாளர் அருட்திரு எஸ்.ஜே.கதிரேசபிள்ளை குறிப்பிட்டார்.


  Comments - 0

  • bzukmar Thursday, 01 March 2012 07:10 AM

    192 வருட வரலாறு கொண்ட பாடசாலையில் இவ்வாறான நிகழ்வு வருந்ததக்கது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .