Suganthini Ratnam / 2012 பெப்ரவரி 29 , மு.ப. 09:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜதுசன்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டு வந்ததாகத் தெரிவிக்கப்படும் பெண்ணொருவரை களுவாஞ்சிக்குடி பொலிஸார் நேற்று செவ்வாய்க்கிழமை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து தங்கநகைகளையும் மீட்டுள்ளனர்.
இப்பெண் இறுதியாக பெரிய போரதீவிலுள்ள வீடொன்றில் தங்கச்சங்கிலி, கையடக்கத் தொலைபேசி, பணம் ஆகியவற்றை திருடியுள்ளார். இந்த நிலையில், குறித்த கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்புகொண்டு மேற்கொள்ளப்பட்ட புலன்விசாரணையைத் தொடர்ந்து இப்பெண் கைதுசெய்யப்பட்டார்.
களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவில் 5 திருட்டுச் சம்பவங்களுடனும் காத்தான்குடி பொலிஸ் பிரிவில் ஒரு கொள்ளைச் சம்பவத்துடனும் கல்முனைப் பொலிஸ் பிரிவில் ஒரு கொள்ளைச் சம்பவத்துடனும் இப்பெண் தொடர்புபட்டுள்ளார். இதன்போது சந்தேக நபரிடமிருந்து திருடப்பட்ட பொருட்களான 12 இலட்சம் ரூபா பெறுமதியான தங்கநகைகளும் கையடக்கத் தொலைபேசிகளும் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.
திருடப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் தங்கநகைகள் களுவாஞ்சிக்குடி நகைக் கடைகளில் அடகு வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சந்தேக நபருடன் நகை அடகுக்கடைகளின் உரிமையாளர்கள் 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பீ.ஆர்.மானவடு தலைமையில் புலன்விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
.jpg)
16 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago
neethan Thursday, 01 March 2012 06:49 AM
எமனை பச்சடி போடுவோரும் அரசியல் திரைக்குள் மறைந்து வாழ்கின்றனர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
4 hours ago
5 hours ago