2026 மே 09, சனிக்கிழமை

'போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவோம்' திட்டத்தில் பாடசாலைகள் திறப்பு

Menaka Mookandi   / 2012 பெப்ரவரி 29 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேச மாணவர்களின் நலன்கருதி 'போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவோம்' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாடசாலைகள் திறந்துவைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட கொச்சிபாம், வெள்ளிமலைப்பிள்ளையார் தமிழ் கலவன் ஆகியனவே பாடசாலை இன்று திறந்துவைக்கப்பட்டது.

கல்வியமைச்சின் வேண்டுகோளின்பேரில் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் யு.என்.எச்.ஆர் அனுசரனையுடன் சுமார் ஒருகோடியே 14 இலட்சம் ரூபா செலவில் இந்த பாடசாலை அமைக்கப்பட்டுள்ளது.
 
கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்பாளரும் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன்,பட்டிருப்பு கல்விப்பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளநாயம், யு.என்.எச.;ஆர் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் ரகுமான் உட்பட அதிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஐந்து வகுப்பறைகளைக்கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாடசாலை மூலம் இப்பிரதேச அதிகளவான மாணவர்கள் கல்வி கற்கமுடியும். இதுவரை காலமும் தற்காலிக இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவந்த கல்வி நடவடிக்கைகள் நிரந்தர இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் கந்தசாமி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .