2026 மே 09, சனிக்கிழமை

ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினராக செய்யது அபூபக்கர் அன்வர் நியமனம்

Super User   / 2012 மார்ச் 04 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஸரீபா)

ஓட்டமாவடி பிரதேச சபையின் உறுப்பினராக செய்யது அபூபக்கர் அன்வர் நேற்று சனிக்கிழமை சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

மீராவோடை அல் - ஹிதாயா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி முன்னிலையில் பிரதேச சபை உறுப்பினராக இவர் சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.

2011ம் ஆண்டு நடைபெற்ற ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில்   எஸ்.எம்.சிஹாப்தீன் குறித்த பிரதேச சபையின் உத்தியோகத்தராக கடமையாற்றி கொண்டு பிரதேச சபை தேர்தலில் போட்டியிட்டமை உள்ளுராட்சி சட்டத்திற்கு முரணானதால் பதவியில் இருந்து நிறுத்தப்பட்டார்.

குறித்த வெற்றிடத்திற்கே செய்யது அபூபக்கர் அன்வர் புதிய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். ஓட்டமாவடி பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட செய்யது அபூபக்கர் அன்வர் 1,016 விருப்பு வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .