2026 மே 09, சனிக்கிழமை

dd

பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் பாலர் பாடசாலை

Kogilavani   / 2012 மார்ச் 05 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

 

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமமான தோணிதாட்டமடு கிராமத்தில் இயங்கிவரும் பாலர் பாடசாலையானது பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இந்தக் கிராமத்தில் சுமார் 50 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் பாலர் பாடசாலையானது ஒரு வீட்டில் பல்வேறு வளப்பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றது.

'கரும்பலகை ஒன்று இல்லாமல் வீட்டின் சுவற்றில் எழுதி பிள்ளைகளுக்கான கற்றல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றேன்' என இப்பாலர் பாடசாலையின் ஆசிரியை தெரிவித்தார்.

எனவே இதுத் தொடர்பில் உரிய தரப்பினர் கூடுதல் கவனம் செலுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .