Suganthini Ratnam / 2012 மார்ச் 06 , மு.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சுக்ரி)
சமுர்த்தி முத்திரைக்கான உணவுப்பொருள் விநியோகத்தில் பயனாளிகளுக்கு அரிசியை மாத்திரம் வழங்குவதை கண்டிப்பாகத் தவிர்த்துக்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சகல பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களில் சமுர்த்திப் பயனாளிகளுக்கு அரிசி மாத்திரம் வழங்கப்பட்டு வந்த நிலையிலேயே அரசாங்க அதிபர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். இந்த நிலையில், சமுர்த்தி முத்திரைக்கான ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான உணவுப்பொருள் விநியோகத்தின்போது அரிசியுடன் சேர்த்து சீனி, பருப்பு, பால்மா போன்ற உணவுப் பொருட்களை வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் இந்த அறிவித்தல் கடிதம் மாவட்டத்திலுள்ள சகல கூட்டுறவுச்சங்கங்களின் முகாமையாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதுடன், இதன் பிரதிகள் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .