Suganthini Ratnam / 2012 மார்ச் 06 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன்)
கிழக்கு மாகாணத்தில் உடற்கல்வி ஆசிரியர்கள் மேலதிகமாக உள்ளார்கள். இவர்கள் தேவையேற்படின் வேறு மாகாணங்களுக்கு இடமாற்றம் செய்யப்படுவார்கள். கிழக்கு மாகாணத்தின் சில கல்வி வலயங்களில் உடற்கல்வி ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் இ.எ.போல் தெரிவித்தார்.
மட்டு. மகாஜனக் கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற உடற்கல்வி ஆசிரியர்களுக்கான விசேட கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இதேவேளை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட கல்வி அமைச்சின் விளையாட்டுப் பணிப்பாளர் ண்ராகண கருணாரத்னா தெரிவிக்கையில், தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றி விளக்கமளித்தார்.
கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள உடற்கல்வி உதவிக்கல்வி பணிப்பாளர் ஜெ.உதயரெட்ணத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கூட்டத்தில் கல்முனை, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இருந்த தமிழ், சிங்கள மொழி மூலமான 323 உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
.jpg)
neethan Tuesday, 06 March 2012 05:58 PM
உடற்கல்வி ஆசிரியர்களுக்கான விசேட கூட்டத்தில் உரையாற்றும் அதிதி தினமும் உடல் பயிற்சி செய்கிறார் போல, ஆனால் ஆசிரிய ஆசிரியைகள்......?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .